மூட்டு வலியால் கஷ்டப்படுகிறீர்களா? இதை சற்று படியுங்கள்!
- admin
- Category: உடல் நலம்
- Hits: 129
மூட்டு வலி என்பது குறிப்பிட்ட வயதிற்கு மேல் பலரையும் பாதிக்கிறது. மூட்டுகளில் வலி உண்டானால் அன்றாட வேலைகளை செய்ய மிகவும் அதிகமாக பாதிக்கப்படுகின்றோம். மூட்டு வலி என்பது நமது தினசரி வாழ்க்கையில் பெரும் பிரச்சனையாக அமைந்து விடுகிறது. இப்போது இளம் வயதிலேயே பலரும் மூட்டு வலியால் அவதிப்படுகிறார்கள்.
மூட்டு வலி இருப்பவர்கள் தங்கள் உடல் எடையில் அதிக கவனம் கொள்ள வேண்டும். உடல் எடை அதிகரித்தால் மூட்டு வலியும் அதிகரிக்கும்.
மூட்டு வலி வராமல் தடுக்கவும், மூட்டு வலியால் அவதிப்படுபவர்கள் எத்தகைய உணவுமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை பற்றியும் பார்ப்போம்.
மூட்டுவலி உள்ளவர்கள் சேர்த்துக்கொள்ள வேண்டிய உணவுகள் :
? மூட்டு வலி இருப்பவர்களின் உடலுக்கு தண்ணீர் அதிகம் தேவைப்படும். தினமும் குறைந்தது 2 லிட்டர் தண்ணீராவது பருக வேண்டும்.
? சிறுபயிறு, கடலை, பெரும்பயறு போன்றவைகளை முளைவிட வைத்து சாப்பிடலாம்.
? நெல்லிக்காய், ஆரஞ்சுப்பழம், சாத்துக்குடி, திராட்சை பழம் போன்றவைகளில் வைட்டமின் சி சத்துள்ளது. இவைகளை சாப்பிட்டால் எலும்புகளும், தசையும் பலப்படும்.
? எலும்பு பலமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள் வெண்டைக்காயை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
? மூட்டு வலி இருப்பவர்கள் சிக்கன் சூப், முருங்கை இலை சூப் போன்றவற்றை தினமும் இரண்டு வேளை பருகலாம்.
? பால், தயிர், வெண்ணெய், பாலாடைக்கட்டி, சிறுவகை மீன்கள், கொள்ளு, எள், கீரை போன்ற கால்சியச்சத்து அதிகம் உள்ள உணவுகளை சேர்த்துக்கொள்ளலாம்.
? பூண்டு மற்றும் வெங்காயத்தை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது எலும்புகளை பலப்படுத்தும்.
? பூசணிக்காயில் கரோட்டீன் அதிகம் நிறைந்துள்ளது. எனவே, இதனை சாப்பிடுவதால், மூட்டுகளில் ஏற்படும் காயங்கள், வீக்கங்கள் மற்றும் வலிகள் போன்றவை நாளடைவில் குணமாகும்.
? கேழ்வரகு, கம்பு, எள் போன்ற தானியங்களில் இருக்கும் ஆன்டி ஆக்சிடென்ட் மூட்டுகளின் வீக்கத்தை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டவை.
? மீன்களில் இருக்கும் வைட்டமின் டி சத்து எலும்பு பலத்திற்கு ஏற்றது.
? பாதாம், பிஸ்தா, உலர் திராட்சை, பேரீச்சம்பழம் போன்றவைகள் எலும்பு பலத்தை அதிகரிக்க உதவும்.
? க்ரீன் டீயில் நிறைய ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. எனவே, அவை உடலின் மூட்டுகளில் ஏற்படும் வலியின் அளவை குறைத்துவிடும்.
தவிர்க்க வேண்டிய உணவுகள் :
? தக்காளியின் விதைகளில் யூரிக் ஆசிட் அதிகம் உள்ளது. எனவே, தக்காளியை அதிகம் சாப்பிட்டால், உடலில் யூரிக் ஆசிட்டின் அளவானது அதிகமாகி, வலியானது இன்னும் கடுமையாகிவிடும். எனவே, தக்காளியை தவிர்ப்பது நல்லது.
? நொறுக்குத்தீனிகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
? அதிக அளவில் காபி, டீ பருகினால் எலும்பின் வலிமை குறையும்.
? சோடா மற்றும் குளிர்பானங்கள் பருகுவது எலும்புகளில் இருக்கும் கால்சியச்சத்தை உடலிலிருந்து வெளியேற்றிவிடும்.
? மூட்டு வலிகளுக்கு சர்க்கரை மிகவும் பாதிப்பை விளைவிக்கும் ஒரு உணவுப் பொருள். ஏனெனில் சர்க்கரை அதிகம் சாப்பிட்டால், உடல் எடை அதிகமாவதால், மூட்டுகளில் அழுத்தம் அதிகரித்து, வலியும் அதிகமாகும்.
? கத்திரிக்காய், சிவப்பு குடைமிளகாய் மற்றும் உருளைக்கிழங்கு போன்றவற்றில் அல்கலாய்டுகள் அதிகம் இருப்பதால், அவை மூட்டுகளில் காயங்களை அதிகப்படுத்தி, குணமாகிக் கொண்டிருக்கும் மூட்டு வலியையும் குணமாகாமல் தடுக்கும். எனவே, இந்த காய்கறிகள் உணவில் சேர்த்து கொள்வதை தவிர்ப்பது நல்லது.