காய்கறிகளில் எவ்வளவு நன்மை உள்ளது என்று தெரியுமா?
- admin
- Category: உடல் நலம்
- Hits: 143
கத்தரிக்காய் :
? உடல் இயக்கம் சீராவதற்கு கத்தரிக்காய் பயன்படுகிறது. இதில் ஃபோலிக் அமிலம், கொலின் மற்றும் நார்ச்சத்து இருக்கிறது. மிகக் குறைந்த கலோரி, இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் நிறையத் தாது உப்புக்களும் இதில் உண்டு. இது வாய்ப்புண்ணை குணப்படுத்தும்.
காலிஃபிளவர் :
? காலிஃபிளவர், இரத்த ஓட்டத்தை சீரமைக்கிறது. மேலும் சிறுநீரகத்தினை சிறப்பாக செயல்பட வைக்கிறது. நரம்பை பலமாக்கும், உடலுக்கு புத்துணர்வு தரும்.
பீன்ஸ் :
? இதில் வைட்டமின் சி, ஃபோலிக் அமிலம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வு தரும். எலும்பு, பற்களின் பலத்தை கூட்டும். கல்லீரல், உஷ்ணத்தை நீக்கும்.
பீட்ரூட்:
? பீட்ரூட்டை பிழிந்து சாறு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வர அல்சர் குணமாகும். பீட்ரூட் கஷாயம் மூலநோயை குணப்படுத்தும். மேலும் இரத்தத்தை சுத்திகரிக்கும். நரம்பு தளர்ச்சியை போக்கும்.
உருளைக்கிழங்கு :
? உருளைக்கிழங்கு ஓர் உன்னதமான ஊட்டச்சத்து மிக்க உணவு ஆகும். மேலும் சரும நோயை விரட்டும். உடலுக்கு வலிமை தரும்.
வாழைத்தண்டு :
? இதில் நீர்ச்சத்து, நார்ச்சத்துகள் நிறைந்துள்ளது. ஓரளவு வைட்டமின் சி, பாஸ்பரஸ், மிகக் குறைந்த கலோரி ஆகியவை இதில் உண்டு. இவை உடல் நஞ்சை நீக்கும். பித்தம், உடல் உஷ்ணத்தை போக்கும். சிறுநீரக கற்களை நீக்கும் சக்தி உடையது.
முருங்கைக்காய் :
? இது ஒரு சத்துள்ள உணவு. இது உடல் வலிமையைக் கொடுக்க வல்லது. நரம்புகளை வலுவாக்கும். கர்ப்பபை கோளாறுகளை விலக்கும்.
கேரட் :
? பீட்டா கரோட்டின், நார்ச்சத்து, பாஸ்பரஸ் ஆகிய சத்துகள் இதில் நிறைய இருக்கின்றன. கண், தோல் மற்றும் எலும்பு உறுதிபடவும், ரத்த விருத்திக்கும் மிகவும் நல்லது.
வெள்ளரிக்காய் :
? நீர்ச்சத்து நிறைந்தது. மிகக் குறைந்த அளவு கலோரி, ஓரளவு ஃபோலிக் அமிலம், பாஸ்பரஸ் ஆகிய சத்துகள் இருக்கின்றன. மேலும் இவை தாகத்தைத் தணிக்கும். சருமப் பிரச்சனைகளை நீக்கும்.
வெண்டைக்காய் :
? அதிக அளவு ஃபோலிக் அமிலம், வைட்டமின் சி, பொட்டாசியம் ஓரளவும், மாவுச்சத்து, புரதச்சத்து, இரும்புச்சத்து, பீட்டா கரோட்டின் குறைந்த அளவும் இருக்கின்றன. உடல் செயல்பாடு நல்லபடியாக இருக்கவும், இரத்த விருத்திக்கும் உதவும்.
அவரைக்காய் :
? நிறைய நார்ச்சத்து, ஓரளவு புரதம், குறைந்த அளவு பொட்டாசியம், மிகக் குறைந்த அளவு கலோரி உள்ள காய்கறி இது. மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வு தரும்.