40 வயதிலும் சிக்கென்று இருக்கும் நடிகை த்ரிஷாவின் ஃபிட்னஸ் ரகசியம் தெரியுமா?
- MSF.Nadhwa
- Category: உடல் நலம்
- Hits: 51
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளுள் ஒருவர் தான் த்ரிஷா கிருஷ்ணன். இவர் தமிழில் மட்டுமின்றி, தெலுங்கிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் திரைப்படங்களில் நடிப்பதற்கு முன் 1999 ஆம் ஆண்டு சென்னை அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 20 வருடங்களுக்கும் மேலாக தமிழ் திரையுலகில் பணியாற்றி வருகிறார்.
40 வயதாகியும் த்ரிஷா இன்னும் அழகு சற்றும் குறையாமல், ஃபிட்டாக சிக்கென்று இருப்பதன் பின்னணியில் உள்ள ரகசியத்தை தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா?
நடிகை த்ரிஷாவின் ஃபிட்னஸ் ரகசியங்கள் இதோ....
* த்ரிஷா காலை வேளையில் நல்ல ஊட்டச்சத்துள்ள பழங்களை தான் உட்கொள்வாராம். எண்ணெயில் பொரித்த உணவுகளை உட்கொள்ளமாட்டாராம்.
* முக்கியமாக த்ரிஷா ஹோட்டல் உணவுகளை அதிகம் உட்கொள்ளமாட்டாராம். பெரும்பாலும் வீட்டில் சமைத்த உணவுகளை மட்டும் தான் சாப்பிடுவாராம். ஆம்லெட், தயிர், முழு தானிய பிரட் போன்றவற்றை விரும்பி சாப்பிடுவாராம்.
* தினமும் யோகா, உடற்பயிற்சி, தியானம் போன்றவற்றை தவறாமல் ஈடுபடுவாராம்.
* உடல் நீரேற்றத்துடன் இருக்க நீரை அதிகளவில் குடிப்பாராம். இதுதவிர ஜூஸ்களை விரும்பி குடிப்பாராம். அதுவும் நற்பதமான பழங்களால் தயாரிக்கப்பட்ட ஜூஸ்களைத் தான் அதிகம் குடிப்பாராம். முக்கியமாக வைட்டமின் சி அதிகம் நிறைந்த எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு ஜூஸ்களை விரும்பி குடிப்பாராம்.
* மைதா உணவுகள் மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகளை சாப்பிடமாட்டாராம்.
* ஸ்நாக்ஸ் சாப்பிடுவதாக இருந்தால் பாதாம், பிஸ்தா, முந்திரி போன்றவற்றை தான் சாப்பிடுவாராம். முக்கியமாக எப்போதும் ஏதாவது ஒரு நட்ஸை தன் பையில் வைத்திருப்பாராம்.
* த்ரிஷாவிற்கு பிரியாணி என்றால் ரொம்பவும் பிடிக்கும். ஒருவேளை உடல் எடை அதிகரித்துவிட்டால், அதைக் குறைக்க கடினமாக உழைப்பாராம்.