Switch Language:   English | தமிழ்

    நீங்கள் உறங்கும் கால அளவு சரியானதா?

    சரியாக உறங்காவிட்டால் நம்மில் பெரும்பாலோருக்கு "சரி நாம் போதிய அளவு உறங்கவில்லை" என்று தெரியும். ஆனால் எது "போதிய அளவு உறக்கம்" ? எனும் கேள்விக்கு எம்மில் பலருக்கு விடை தெரியாது.

    இதற்கு விடை, "உங்கள் வயது என்ன என்பதில் தான் இருக்கிறது", என்கிறது வாஷிங்டனில் இருந்து இயங்கும் தேசிய உறக்க நிறுவனம் சமீபத்தில் நடத்திய ஒரு ஆய்வு.

    குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட வேலையைச் செய்யும் பழக்கமின்மை, மது மற்றும் காபி அல்லது பிற உடனடி சக்தி தரும் பானங்களை அருந்துவது போன்றவையும், கடிகாரங்கள் மற்றும், சூரிய வெளிச்சம் போன்றவை உடலில் உறக்கத்தை குறிப்பிட்ட நேரத்தில் வரவழைக்கும் இயல்பான உணர்வுக்கு இடைஞ்சல் தரும் என்கிறது இந்த ஆய்வு.

    தனிப்பட்ட மனிதர்களின் சொந்த வாழ்க்கை முறைதான் இந்த உறக்கத்துக்கான தேவைகளை புரிந்துகொள்ள உதவ முக்கியமான அம்சம் என்று கூறும் அமெரிக்க தேசிய உறக்க நிறுவனம் (The US National Sleep Foundation) ஆனால் ஒருவரது வயது என்ன என்பதைப் பொறுத்து பொதுவான பரிந்துரைகளைத் தரலாம் என்கிறது.


    01. பிறந்த குழந்தைகள் (0 – மூன்று மாதங்கள் வரை) : 14 – 17 மணிநேரங்கள்
    02. குழந்தைகள் (4 – 11 மாதம் வரை) : 12 – 15 மணி நேரங்கள்
    03. தளிர்நடை பயிலும் குழந்தைகள் ( 1 – 2 வயது வரை) : 9 – 16 மணிநேரங்கள்
    04. பள்ளி செல்லும் முன் வயதுக் குழந்தைகள் ( 3 – 5 வயது வரை) : 10 – 13 மணிநேரங்கள்
    05. பள்ளி செல்லும் வயது சிறார்கள் ( 6 – 13 வயது வரை):  9 – 11 மணிநேரங்கள்
    06. பதின்பருவச் சிறார்கள் : 8 – 10 மணிநேரங்கள்
    07. வயது வந்த இளைஞர்கள் ( 18 – 25 வயது வரை) : 7 – 9 மணிநேரங்கள்
    08. வயது வந்தவர்கள் ( 26 – 64 வயது வரை) : 7 – 9 மணிநேரங்கள்
    09. மற்ற வயது வந்தவர்கள் ( 65 வயது, அதற்கு மேல்) : 7 – 8 மணிநேரங்கள்