Switch Language:   English | தமிழ்

    கோடை காலத்திற்கு பொருத்தமான நன்மையான காய்கறிகள்

    தற்போதைய கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் கூடுதலாக‌ இருப்பதனால் எல்லோரும் குளிரான உணவுகளை உண்ண வேண்டும் என என்னுவார்கள். ஆனால், அந்த காலங்களில் என்னென்ன காய்கறிகள் சாப்பிடலாம் என்பது குறித்து யாரும் கணக்கெடுத்து கொள்வதில்லை.

    இதனால் கோடைகாலத்திலும் வசந்தமாய் வாழ்வதற்காக உங்களுக்காக இதோ கோடைகால காய்கறிகள்,

    கேரட்

    ஆண்டு முழுவதும் இந்த காய்கறி கிடைக்கும். ஆனால் கோடை காலத்தில் சற்று அதிகமாகவே கிடைக்கும். இதனை சாப்பிட்டால், உடல் குளிர்ச்சி அடைவதோடு, கண்களுக்கும் மிகவும் நல்லது.


    பூண்டு

    வாசனைக்காக பயன்படுத்தும் பூண்டு இதயத்திற்கு மிகவும் நல்லது. இது குடல் நோய் வருவதை தடுப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.

    பீன்ஸ்

    வசந்த கால காய்கறிகளுள் பச்சை நிற பீன்ஸ் ஒன்று. இந்த காய்கறி இதயத்திற்கும், உடல் எடையை குறைப்பதற்கு சிறந்தது. எனவே டயட்டில் இருப்பவர்கள், இந்த காய்கறியை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.

    முள்ளங்கி

    வசந்த காலத்தில் வெள்ளை மற்றும் சிவப்பு நிற முள்ளங்கியை அதிகம் வாங்கி சாப்பிடலாம். இந்த காய்கறிகளில் உடலை ஆரோக்கியத்துடன் வைக்கும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன.

    உருளைக்கிழங்கு

    உருளைக்கிழங்கை பிடிக்காதவர்களே இருக்கமாட்டார்கள். அத்தகையவர்களுக்கு ஒரு நல்ல செய்தி என்னவென்றால், இந்த காய்கறி வசந்த மற்றும் கோடை காலத்தில் அதிகமாகவும், விலை மலிவுடனும் கிடைக்கும்.