Switch Language:   English | தமிழ்

    41 நாட்களாக குளிர்­சா­தனப் பெட்­டி­யுடன் ஓடிய நபர்

    நல­நி­தி­ய­மொன்­றுக்கு நிதி திரட்­டு­வ­தற்­காக குளிர்­சா­தனப் பெட்­டி­யொன்றை முதுகில் சுமந்­து­கொண்டு, பிரிட்­டனின் நீள­த்துக்கு சம­மான தூரம் ஓடிய டொனி பீனிக்ஸ் என்­பவர் முள்­ளந்­தண்டு உபாதை கார­ண­மாக வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளார்.

    “புபா கிரேட் நேர்த் ரண்” என அழைக்­கப்­படும் இப்­போட்டி 21கிலோ­மீற்றர் தூரம் கொண்­டது. 1991 முதல் வரு­டாந்தம் செப்டெம்பர் மாதம் நடை­பெறும் இந்த ஓட்­டப்­போட்டி உலகின் இரண்­டா­வது மிகப்­பெ­ரிய அரை­ ம­ரதன் போட்­டி­யாகும். இவ்­வ­ருடம் 56,000 பேர் இப்­போட்­டி­களில் பங்­கு­பற்­றினர்.
    ஆனால் பீனிக்ஸ் மொரிஸன் அதேபாதையில்,  மீண்டும் மீண்டும்  41 நாட்களாக ஓடினார். இதன் மூலம்  1632 கிலோமீற்றர் தூரத்தை (1009 மைல்கள்) அவர் நிறைவு செய்தார். 49 வய­தான டொனி பீனிக்ஸ், சேர் பொபி ரொப்ஸன் மன்­றத்தின் புற்­றுநோய் ஆய்­வு­க­ளுக்கு நிதி திரட்­டு­வ­தற்­காக இப்­போட்­டியில் பங்­கு­பற்­றினார்.

    இதற்­காக 42.5 கிலோ­கிராம் எடை­யுள்ள குளிர்­சா­தனப் பெட்­டி­யொன்­றையும் முதுகில் சுமந்­து­கொண்டு அவர் ஓடினார்.
    தனது இலக்கை அடைந்தபின் டொனி பீனிக்ஸ் ந­டப்­ப­தற்கு சிர­மப்­பட்டார். அதை­ய­டுத்து வைத்­தி­ய­சா­லை­யொன்றில் அவர் அனு­ம­திக்­கப்­பட்டார். ஏம்.ஆர்.ஐ. ஸ்கான் பரி­சோ­தனை மேற்­கொள்­ளப்­பட்­ட­போது அவரின் முள்­ளந்­தண்டில் பாதிப்பு ஏற்­பட்­டி­ருப்­பது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது.

    போட்­டியின் முடிவில் எனக்கு கடு­மை­யான வலியும் அதே­வேளை மகிழ்ச்­சியும் ஏற்­பட்­டது. பலர் பதா­கை­களை ஏந்­தியும் எனது பெயரை கூறியும் என்னை உற்­சா­கப்­ப­டுத்­தினர்.  நான் சாதாரண நபர். எனக்குப் பின்னால் பெரும் எண்ணிக்கையானோர் திரண்டு ஆதரவளித்தமை மகிழ்ச்சியளிக்கிறது” என டொனி பீனிக்ஸ் கூறினார்.