Switch Language:   English | தமிழ்

    கடலுக்கடியில் உணவு உண்ணும் பாக்கியம்

    சீனாவைச் சேர்ந்த நிறுவனமொன்று, கடலுக்கடியில் மீன்களுடன் இணைந்து உணவு உண்ணும் பாக்கியத்தை வாடிக்கையாளர்களுக்கு ஏற்படுத்தி தந்துள்ளது.

    அதிஷ்டம் நிறைந்த வாடிக்கையாளர்கள் மெழுகுவர்த்திகளின் ஒளியில் அமர்ந்துகொண்டு சுற்றிவர மீன்களை பார்த்துகொண்டு உணவு உண்ண முடியும்.

    வாடிக்கையாளர்களுக்கு வித்தியசாமான அனுபவமொன்றை கொடுப்பதற்காக நீரூக்கடியிலான சுரங்மொன்று சீனாவில், டியான்ஜன் கடலில் அமைக்கப்பட்டுள்ளது.

    வாடிக்கையாளர்கள் உள்ளே இருக்க அதனைச் சுற்றி கண்ணாடியிலான கூடாரம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த கூடாரத்தின் வெளியே மீன்கள், கடல் ஆமைகள் போன்ற கடல்வாழ் உயிரினங்கள் வாடிக்கையளர்களுக்கு விருந்தளிக்கின்றன.

    இதேவேளை, இவ் வாடிக்கையாளர்களுக்கு இசை விருந்தும் வழங்கப்படுகிறது. கடலுக்கடியில் இருவர் இசைகருவிகளை வைத்துகொண்டு இசை வழங்கிய வண்ணமுள்ளனர்.

    சீனா மற்றும் வியட்நாமில் கொண்டாடப்படவுள்ள   இழையுதிர்கால விழாவை முன்னிட்டு இந்நிகழ்வு ஒழுங்கு செய்யபட்டமை குறிப்பிடத்தக்கது.