Switch Language:   English | தமிழ்

    மன்னார் கடற்பரப்பில் யானையின் தும்பிக்கையை ஒத்த, மீன் பிடிபட்டது.

    மன்னார் கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்களுக்கு அரிய வகையிலான மீனினமொன்று கிடைத்துள்ளது.

    நேற்று முன்தினம் இரவு மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இராமேஸ்வரம் மீனவர்களுக்கே இந்த மீன்கள் கிடைத்துள்ளது.

    இந்தியாவின் பாம்பன் பகுதி வாழ் மீனவர்களுக்கே இந்த அரிய வகையிலான மீனினம் சிக்குண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

    யானையின் தும்பிக்கையை ஒத்ததான இந்த மீனின் முக வடிவமைப்பு அமைந்துள்ளதாகவும், மீனினத்தின் உடலை ஒத்ததாக இந்த மீனின் உடல் அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

    இந்த மீன்கள் 200 மீற்றர் முதல் 2000 மீற்றர் வரை அழமான இடத்தில் இந்த மீன்கள் வாழ்வதாகவும்,60 சென்றி மீற்றர் முதல் 140 சென்றி மீற்றர் வரை இந்த மீன் வளரும் என கடல்சார் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

    இந்த மீனினமானது தனது தும்பிக்கையை சுய பாதுகாப்பு, தகவல் தொடர்பு மற்றும் நுகர்தல் போன்ற செயற்பாடுகளுக்காக பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.