Switch Language:   English | தமிழ்

    பொறுமையிருந்தால் வெற்றி பெறலாம்.

    ஒவ்வொரு கண்டுபிடிப்பையும் அறிஞர்கள் கண்டு பிடிக்கும் முன், படாதபாடு பட்டுள்ளனர். அதுவும், அந்தக் கண்டுபிடிப்பு வெற்றியடைய பல ஆண்டுகள் காத்திருந்து சாதனை நிகழ்த்தியுள்ளனர். கண்டுபிடிப்பு மற்றும் சாதனை நிகழ்த்த ஒவ்வொருவரும் எத்தனை ஆண்டுகள் காத்திருந்தனர் என்ற பட்டியல் இதோ..


    * தந்தியைக் கண்டுபிடிக்க மார்கோனிக்கு ஓராண்டு ஆனது.

    * தாமஸ் ஆல்வா எடிசன் சேமிப்பு மின்கலத்தை கண்டுபிடிக்க, 9 ஆண்டுகள் ஆனது.

    * டாக்டர் அலெக்சாண்டர் பிளமிங், பென்சிலினை கண்டுபிடிக்க எட்டு ஆண்டுகள் ஆனது.

    * சியர்ஸ் டவர் கட்டி முடிக்க 3 ஆண்டுகள் ஆனது.

    * வால்ட் டிஸ்னி 13 ஆண்டுகள் முயற்சி செய்து கார்ட்டூன் படங்களை தயாரித்தார்.

    * போஸ்ட் எனும் நாடக நூலை எழுத, கதே என்பவருக்கு 60 ஆண்டுகள் ஆயின.

    * பைசா நகர கோபுரம் கட்டி முடிக்க, 174 ஆண்டுகள் ஆனது.

    * கிம்பர்லி சுரங்கம் வெட்ட, 43 ஆண்டுகள் ஆனது.


    அன்னை தெரசா ஒருமுறை ஏழை எளியவர்களுக்காக நிதி வசூல் செய்ய ஒரு செல்வந்தரிடம் சென்றிருந்தார். அங்கே சென்று அவரை வணங்கி தாம் வந்திருப்பதன் நோக்கம் சொல்லி வலது கையை காட்டி ஏதேனும் தாருங்கள் என்றார். அவருக்கு தகுந்த மரியாதை கொடுக்காமல் கடுஞ்சொல் பேசிய அந்த செல்வந்தன் காறி எச்சிலை துப்பினான் அவரின் வலக்கை மீது.


    உடனே கொஞ்சமும் சினம் கொள்ளாமல் சிரித்துக் கொண்டே சொன்னார் அன்னை, "செல்வந்தரே, சற்றுமுன் தாங்கள் என் வலக்கையில் கொடுத்ததை நான் எனக்காக வைத்துக் கொண்டேன். அந்த ஏழைகளுக்காக என் இடக்கையிலும் ஏதேனும் தாருங்கள்" என்றார் பொறுமையாக.


    உடனே மனம் திருந்திய செல்வந்தன் பிறகு பணம் கொடுத்து அனுப்பினான்.


    M.Jarook Mohamed.
    (HND in Soft Dev/ Web Dev)