Switch Language:   English | தமிழ்

    மாணவ சமுதாயம்

    மனதில் தோன்றும் ஒவ்வொரு சிந்தனைகளையும் மதி கொண்டு பிரித்து நோக்கும் திறன் கொண்டவனே இன்றும் என்றும் சிறந்த ஆற்றலும் ஒழுக்கமும் உள்ள மாணவனாக வலம் வருகிறான்.

    இன்று தோன்றும் நவீனங்களில் மாணவர்கள் தங்களையும் மறந்து நேரத்தை செலவிடுகிறார்கள். குறிப்பாக இன்று முகப் புத்தகத்தில் மாட்டிக் கொண்டு வெளிவர கூட மனமில்லாமலும் சிலர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். தற்பொழுது தொடர்ந்து வருகின்ற உயிர் இழப்புக்கள் இப்படியான சமூகத் தளங்களினால் வருகின்றது என்று கேட்க்கும் போது மாணவ சமூகம் என்ன ஆகி விடுமோ என்கின்ற அச்சம் இன்னும் அதிகமாகின்றது.

    மாணவர்கள் அனைவரும் சிந்திக்க வேண்டிய முதன்மையான ஒன்று கல்வி. நீங்கள் உங்களுக்காக செய்கின்ற புனித செயல் என்றுதான் நான் சொல்வேன். உங்கள் எதிர்காலம் உங்கள் கைகளில் தான் என்று சொல்வது வெறும் கருத்து அல்ல சிந்தனை ரீதியான உண்மை. விளையாட்டும் வேண்டும் விடா முயற்சியும் வேண்டும். உன்னால் முடிந்தது எது என்று உணர்ந்து கொண்டாலே போதும் சாதனைகள் செய்ய நீ தயாராகி விட்டாய்.

    நிலையான நம்பிக்கையும், மனதில் நிலையான சிந்தனையுமே நிமிர்ந்து வாழ வைக்கும்.
    தேவை அற்ற சிந்தனைகளை விட்டு விட்டு, விடை தெரியாத வாழ்க்கைப் பயணத்தில் உங்களது தேடல்கள் இனிதே ஆரம்பமாக வாழ்த்துக்கள்.