பச்சைப் பயறு கட்லெட்
- Editor
- Category: சமையல் குறிப்புகள்
- Hits: 303
தேவையான பொருட்கள் :
பச்சைப் பயறு - 300 கிராம்,
கேரட், பீன்ஸ் - தலா 75 கிராம்,
மஞ்சள் தூள் - சிறிதளவு,
பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து வறுத்து அரைத்தப்பொடி (கரம் மசாலா) - சிறிதளவு,
வெங்காயம் - 2,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு,
காய்ந்த பிரெட் தூள் - சிறிதளவு.
செய்முறை:
* பச்சைப் பயறைத் 2 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து, வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
* வெங்காயம், பீன்ஸ், கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கடாயில் எண்ணெய் ஊற்றி, வெங்காயம், கேரட், பீன்ஸ், மஞ்சள் தூள், கரம் மசாலா, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக வதக்கி இறக்கி ஆறவைக்கவும்..
* ஒரு பாத்திரத்தில் வதக்கிய மசாலா, வேகவைத்த பச்சைப் பயறு காய்ந்த பிரெட் தூள் சேர்த்து, வடை மாவுப் பதத்துக்குப் பிசைந்து கொள்ளவும்.
* விருப்பமான வடிவில் கட்லெட்டாக பிடித்து வைக்கவும்.
* தோசை கல்லை அடுப்பில் வைத்து அதில் பிடித்து வைத்துள்ள கட்லெட்டை வைத்து சுற்றி எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.
பலன்கள்: மற்ற பயறுகளைவிட புரதச்சத்து நிறைந்தது பச்சைப் பயறு. உடலுக்கு வலுவூட்டும். வளர்இளம் பருவத்தினர் அதிகம் எடுத்துக்கொள்ளலாம்.