Breaking News
ஸ்வீட் சேமியா
- Editor
- Category: சமையல் குறிப்புகள்
- Hits: 194
என்னென்ன தேவை?
சேமியா - 1 கப்
தண்ணீர் - 2 கப்
சர்க்கரை - 1/2 கப்
நெய் - 2 டீஸ்பூன்
நட்ஸ் - 1/4 கப் (முந்திரி, அக்ரூட் பருப்புகள், பிஸ்தா)
ஏலக்காய் பொடி - 1/2 தேக்கரண்டி
குங்குமப்பூ - ஒரு சிட்டிகை
எப்படிச் செய்வது?
ஒரு கடாயில் சிறிய நெய் ஊற்றி சூடான பின் வெட்டி வைத்துள்ள நட்ஸ்யை சேர்த்து பொன் நிறமாக வறுக்கவும். அவற்றை ஒரு கிண்ணத்தில் எடுத்து வைக்கவும். அதே கடாயில் நெய் விட்டு சேமியா சேர்த்து பொன் நிறமாக வறுக்கவும். பிறகு தேவையான அளவு தண்ணீர் விட்டு மூடி சேமியா வேகும் வரை சமைக்கவும், பின்னர் சர்க்கரை சேர்த்து வதக்கவும். அதில் ஒரு சிட்டிகை குங்குமப்பூ மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து கலக்கி இறக்கும் போது நட்ஸ்யை சேர்த்து பரிமாரவும்.