Switch Language:   English | தமிழ்

    குலாப் ஜாமூன்

    தேவையான பொருட்கள்:-

    பால் பவுடர்- 2 கோப்பை
    கோதுமை மாவு - 1 /2 கோப்பை
    சோடா- 1/4 தேக்கரண்டி
    தண்ணீர்- 125 ml
    நெய்- 2 மேசைக்கரண்டி

    *பாகு தயாரிக்க:

    சீனி - 3 கோப்பை
    தண்ணீர்- 3 கோப்பை
    ஏலக்காய்- 6


    செய்முறை:-

    ஜாமூன் செய்ய தேவையான பொருட்களை தயாராய் எடுத்து வைக்கவும். ஒரு பாத்திரத்தில் சீனியை போட்டு தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்து சூடாக்கவும். சீனி பாகு கொதித்ததும் ஏலக்காயை தட்டிப் போட்டு இறக்கி வைக்கவும்.

    ஒரு கப்பில் பால் பவுடருடன் மாவு மற்றும் சோடாவை சேர்த்து கலக்கவும். பின்பு நெய்யை சிறிது சூடாக்கி அதில் சேர்த்து நன்கு கலக்கவும். அதன்பிறகு தண்ணீரை சிறிது சிறிதாக ஊற்றி அனைத்தையும் சேர்த்து கலக்கவும்.

    கைகளில் நெய்யைத் தடவிக் கொண்டு சிறிய உருண்டைகளாக விரிசல் இல்லாமல் உருட்டவும். கடாயில் எண்ணெயை காயவைத்து அடுப்பை குறைத்து வைத்து, அதில் ஜாமூன் உருண்டைகளைப் போடவும்.

    கடாயின் அளவிற்கு தகுந்தபடி குறைந்த எண்ணிக்கையில் போடவும். ஒரு புறன் சிவந்ததும் இலேசாக திருப்பிவிடவும். எல்லா புறமும் சிவந்ததும் வடித்து எடுத்து தயாராக வைத்துள்ள சர்க்கரை பாகில் போடவும். இவ்வாறு அனைத்து உருண்டைகளையும் பொறித்து பாகில் போட்டு ஊற விடவும், நன்கு ஊறியதும் எடுத்து பரிமாறவும்.

    சுவையான குலாப் ஜாமூன் தயார்.