ஜவான் படத்தில் நடிகை நயன்தாரா ஷாருக்கானுடன் நடிக்க காரணம் இதுதானா?
- Fathima Zahrah
- Category: சினிமா
- Hits: 99
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பெயருக்கு ஏற்றவாரு ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக நடித்து அதில் வெற்றியும் கண்டு வருகிறார் நயன்தாரா.
ஐயா படம் மூலம் தமிழ் சினிமாவில் களமிறங்கிய நயன்தாரா நிறைய சறுக்கல்கள், பிரச்சனை, சர்ச்சை என தனது முதல் இன்னிங்ஸில் கண்டுள்ளார்.
ஆனால் கொஞ்சம் இடைவேளைக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்தவர் தாறுமாறான வளர்ச்சியை கண்டு வருகிறார்.
இப்போது ஜவான் படத்தின் மூலம் பாலிவும் வரை சென்றுள்ளவர் அடுத்தும் சஞ்சய் லீலா பன்சாலி படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
அட்லீயும் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கியதன் மூலம் பாலிவுட் சினிமாவில் என்ட்ரீ கொடுத்துள்ளார்.
இந்த படத்தில் முதலில் நாயகியாக நடிக்க வைக்க நடிகை சமந்தாவை தான் அணுகியுள்ளார், ஆனால் உடல்நிலை காரணத்தால் முடியாது என்று கூறியிருக்கிறார்.
எனவே ராஜா ராணி படத்தின் மூலம் தனது முதல் பட வெற்றி நாயகியாக அமைந்த நயன்தாராவை நடிக்க வைத்துள்ளார்.