Switch Language:   English | தமிழ்

    50 மணிநேரம் போனில் பேசும் நோயாளி

    உலக சாதனை படைக்கும் நோக்கில் தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த எச்.ஐ.வி. கிருமி தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் தொடர்ந்து 50 மணி நேரமாக போனில் பேசிக் கொண்டுள்ளார்.

    தலைநகர் பிரெட்டோரியாவின் தெற்கே உள்ள செண்சூரியன் நகரில் ஆண்ட்ரே வன் ஜிஜ்ல் (63) என்பவர் கடந்த வியாழக்கிழமை இந்த சாதனை முயற்சியை தொடங்கினார்.
    தொடர்ந்து 50 மணி நேரமாக நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் பேசிக் கொண்டிருக்கும் இவர், இதற்கு முன்னர் தொடர்ந்து 54 மணி நேரம் 4 நிமிடங்களுக்கு தொலைபேசியில் பேசிய முந்தைய உலக சாதனையை முறியடிப்பேன் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

    எய்ட்ஸ் நோய் தொடர்பான விழிப்புணர்வை உலக மக்களிடையே ஏய்படுத்தவே இந்த சாதனை முயற்சி என கூறும் இவர், கடந்த 30 ஆண்டுகளாக எச்.ஐ.வி. நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிசசை பெற்று வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஏற்கனவே, தொடர்ந்து 13 நாட்கள் வெந்நீர் தொட்டியில் அமர்ந்திருந்தது, டிஸ்கோ இசைக்கேற்ப தொடர்ந்து 345 மணி நேரம் நடனம் ஆடியது உள்ளிட்ட 39 வகை அரிய சாதனைகளையும் செய்துள்ளதாக இவர் கூறுகிறார்.