Switch Language:   English | தமிழ்

    உணவளித்த சிறுமிக்கு பரிசு பொருட்களை வழங்கிய பறவைகள்

    அமெரிக்காவில் உள்ள சீயாட்டில் நகரில் கேபி மேன் என்ற 8 வயது சிறுமி தனது தாயாருடன் வசித்து வருகிறார். பறவைகள் பிரியரான இந்த சிறிய குழந்தை தனது வீட்டுக்கு வரும் காகங்களுக்கு உணவளித்து மகிழ்கிறார்.

    அந்த சிறுமிக்கு 4 வயது இருக்கும்போது, சில உணவு தானியங்களை காகங்களுக்கு போட்டு பழக்கியுள்ளார். தொடர்ந்து இதையே சிறுமி  செய்து வந்த நிலையில், அவரது வீட்டிற்கு பல காகங்கள் படையெடுக்கத் தொடங்கியது. சிறுமியும், காகங்களுக்கு தொடர்ந்து உணவுகளை அளித்து வந்துள்ளார்.

    இந்நிலையில் தனது வீட்டின் முன்பாக, அழகிய மின்னும் பொருட்கள் கிடப்பதை அந்த சிறுமி கண்டு அதனை சேகரிக்க தொடங்கினார்.

    மேலும், இந்த பொருட்கள் எவ்வாறு இங்கு வருகிறது என்பதை தனது தாயாருடன் சேர்ந்து அந்த சிறுமி கண்டுபிடித்தார். காகங்களுக்கு உணவு அளித்ததும், உணவை அருந்திவிட்டு பறந்து செல்லும் காகங்கள், சில மின்னும் பொருட்களை கொண்டுவந்து தனது வீட்டின் முன்பு போடுவது தெரிய வந்தது.

    காகங்களும் தொடர்ந்து பல பரிசு பொருட்களை அந்த சிறுமியின் வீட்டுற்கு கொண்டு வருகின்றன. இதுவரை நூற்றுக்கணக்கான பரிசுப் பொருட்களை காகங்கள் கொண்டுவந்துள்ளதால், அவற்றை எல்லாம் ஒரு பொக்கிஷமாக அந்த சிறுமி சேகரித்து வைத்துள்ளார்.

    இது குறித்து அந்த சிறுமியின் தாயார் லிசா கூறியதாவது, அவளுக்காக தயார் செய்யும் மதிய உணவில் பாதி காகங்களுக்கு தான் போய் சேருகிறது. ஒரு சமயம் தனது ‘கண்டெக்ட் லென்ஸ்’ மூடியை பூங்கா ஒன்றில் விட்டுவிட்டு வந்ததாகவும், அதை ஒரு காகம் கவனமாக தூக்கி வந்து தனது வீட்டின் முன்பு போட்டதை அவரே நேரில் பார்த்ததாக கூறியுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.