Switch Language:   English | தமிழ்

    விலங்­குகள் அனைத்தும் சிறுநீர் கழிப்­ப­தற்கு ஒரே அள­வான நேரம் தானாம்!!

    விலங்­குகள் சிறுநீர் கழிப்­பது குறித்து  விஞ்­ஞா­னிகள் அண்­மையில் ஓர் ஆய்வை மேற்­கொண்­டுள்­ளனர். பாலூட்­டிகள் வகையைச் சேர்ந்த விலங்­குகள் அனைத்தும் சிறுநீர் கழிப்­ப­தற்கு ஏறத்­தாழ ஒரே அள­வான நேரத்தை எடுத்­துக்­கொள்­வ­தாக இந்த ஆய்வின் மூலம் விஞ்­ஞா­னிகள் கண்­ட­றிந்­துள்­ளனர்.

    விலங்­குகள் எந்­த­ளவு பரு­ம­னாக இருந்­தாலும், அதா­வது யானை, எலி, நாய் போன்ற அனைத்து விலங்­கு­களும் சிறுநீர் கழிப்­ப­தற்கு தலா 21 விநாடி நேரம் தேவைப்­ப­டு­கி­றதாம் பல்­வேறு விலங்­குகள் சிறுநீர் கழிப்­பதை வீடி­யோவில் பதி­வு­செய்து, அவ்­வி­லங்­கு­களின் எடை, பருமன், சிறு­நீர்ப்­பையின் பருமன்  முத­லி­ய­வற்றை விஞ்­ஞா­னிகள் ஆராய்ந்­தனர்.

    இதன் மூலம் பாலூட்­டிகள் வகையைச் சேர்ந்த விலங்­குகள் அனைத்தும் சிறுநீர் கழிப்­ப­தற்கு ஏறத்­தாழ 21 விநாடி நேரத்தை எடுத்துக்கொள்வது கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.