Switch Language:   English | தமிழ்

    மனைவியின் காற்சட்டைக்கு பூட்டு போட்ட கணவன்

    மெக்சிகோவை சேர்ந்த 40 வயதான José Antonio León Vela என்பவர் 12 வருடமாக தனது துணைவியின் காற்சட்டைக்கு பூட்டு போட்டு வந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். சுமார் 13 வயதில் இருந்து இவருடன் 25 வயதுடைய துணைவியார் வாழ்ந்து வருகின்றார்.

    இவர் காலையில் வேலைக்கு செல்லும்போது இப்பெண்ணின் காற்சட்டைக்கு பூட்டு போட்டு விட்டு சென்று விடுவாராம். வேறு ஆண்களுடன் உடல் ரீதியான தொடர்பை ஏற்படுத்தக் கூடாதென்று தான் இந்த ஏற்பாடு என போலீசாரிடம் தற்போது சிக்கியுள்ள இவர் கூறியுள்ளார்.

    பெண்ணை கொடுமை படுத்தியது தொடர்பில் விசாரிக்கப்பட்டு வரும் இவர் கடுமையான தண்டனைகளை பெற வாய்ப்புள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.