Switch Language:   English | தமிழ்

    ஜேர்மனியில் கண்டுபிடிக்கப்பட்ட பிளாஸ்டிக் மம்மி

    ஜேர்மனியில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மம்மியின் உடலானது வெறும் பிளாஸ்டிக் என்று சோதனையில் தெரியவந்துள்ளது.

    கடந்த ஒகஸ்ட் மாதம் ஜேர்மனியில் 10 வயது சிறுவன் ஒருவன் வட ஆபிரிக்க மம்மியின் உடலை தனது குடியிருப்பில் கண்டுபிடித்துள்ளான்.

    ஜேர்மனியின் லோவர் சாக்ஸோனி (Lower Saxony) குடியிருப்பில் உள்ள தனது வீட்டின் மாடியறையில் இருந்த கனமான ஒருமரப்பெட்டியின் உள்ளே இருந்த இந்த மம்மியை கண்டுபிடித்தான்.

    இந்த மம்மியின் உடல் இருந்த மரப்பெட்டியானது எகிப்தில் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்று சந்தேகத்தின் அடிப்படையில் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் இந்த மம்மி குறித்து நடத்தப்பட்ட சோதனையில் இதன் உடலானது வெறும் பிளாஸ்டிக் என்றும் ஆனால் இதன் தலைப்பகுதியானது உண்மையானது என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

    மேலும் இந்த மண்டைப்பகுதியானது மருத்துவ மாணவர்களின் சோதனைக்கு உதவும் என்பதால் இதனை அவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. இந்த மம்மியானது சுமார் 2000 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த உடல் என்று தெரிவித்துள்ளனர்.