Switch Language:   English | தமிழ்

    மடிக்கணினி பொருத்தப்பட்ட காற்சட்டை அறிமுகம்

    மடிக்கணினியிலிருந்து சற்றுநேரம்கூட விலகியிருக்க உங்களால் முடியாவிட்டால்  இனி கவலை தேவையில்லை, எங்கும் எப்போதும் கணினியுடன்

    இணைந்திருக்கலாம். ஏனெனில் மடிக்கணினியுடன் இணைக்கப்பட்ட காற்சட்டையை நெதர்லாந்தைச் சேர்ந்த கண்டுபிடிப்பாளர்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

    'மடிக்கணினி' என்பதற்கான உண்மையான அர்த்தத்தை கொடுப்பதாக இது உள்ளது என அவர்கள் கூறுகின்றனர்.  கீ போர்ட், மௌஸ், ஸ்பீக்கர்கள் என்பன மேற்படி காற்சட்டைகளின் தொடைப் பகுதியில் ஒருங்கிணைக்கப்பட்ட நிலையில் உருவாக்கப்பட்டுள்ளன.

    எரிக் டீ நிஜ்ஸ் மற்றும் டிம் ஸ்மித் ஆகியோரால் நடத்தப்படும் வடிவமைப்பு நிறுவனமான நியூவே ஹெரன் என்ற நிறுவனம் இந்த மடிக்கணினி ஜீன்ஸை வடிவமைத்துள்ளது.

    நெகிழ்வுத் தன்மையான விசைப்பலகை, சிறிய ஒலிபெருக்கிகள், மற்றும் சிறிய மவுஸ்  என்பனவற்றின் காரணமாக இக்காற்சட்டையானது வழமையான காற்சட்டைகளைவிட அதிக பாரமாக இருக்க மாட்டா என டீ நிஜ்ஸ் தெரிவித்துள்ளார்.

    மூடிய சூழலில் ஒரு மேசைக்கு பின்னால் அமராமல், எப்போதும் நீங்கள் கணினியை இயக்க முடியும் என்று அவர் கூறியுள்ளார்.

    நவீன வடிவத்தில் மேற்படி காற்சட்டை வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனது பின்புற பாக்கெட்டானது மவுஸை மறைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது. மௌஸை ஆடையுடன் இணைப்பதற்காக இலாஸ்டிக் பொருத்தப்பட்டுள்ளது.  அதுவயர்லெஸ் தொழில்நுட்பத்தினூடக மடிக்கணினியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

    இக்காற்சட்டையானது சந்கைக்கு வந்தால் சுமார் 50,000 ரூபாவாவுக்கு விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இம்முழுத்திட்டமும் சிக்கலானது. இவற்றை சந்தைக்கு கொண்டுவருவதற்கான பணம் இப்போது தம்மிடம் இல்லை என டீ நிஜ்ஸ் கூறியுள்ளார்.