Switch Language:   English | தமிழ்

    புற ஊதாக்கதிர்களினால் ஆவியாகும் 'வைரக்கற்கள்'

    வைரத்தின் தன்மை மற்றும் கதிர்வீச்சுக்களினால் அதில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து அண்மையில் அவுஸ்ரேலியாவின் மெக்கிரி பல்கலைக்கழகத்தின் வைர ஆராய்ச்சியாளர் ரிச்சர்ட் மில்டர்ன் தலைமையில் விரிவான ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டது. அதன்போது வைரக்கற்களின் மீது புற ஊதாக்கதிர்கள்()தொடர்ந்து படும்போது, அதில் பள்ளங்கள் ஏற்படுகின்றன என்பது கண்டறியப்பட்டுள்ளது. முத்துக்களைப் போன்றே, வைரக்கற்களும் ஆவியாகும் தன்மை உடையது. இவற்றின் மீது புற ஊதாக்கதிர்கள் படும்போது, வைரக்கற்கள் விரைவில் ஆவியாகின்றது. வேறு சில உலோகங்களைப் போன்று வைரத்தையும் ஆவியாக்கக்கூடிய சக்தி புற ஊதாக்கதிர்களுக்கு உண்டு. அதிக வெப்பத்தில் நீண்ட நேரமாக இக்கதிர்வீச்சில் இருந்த கற்களே அதிகம் கரைந்தன. சூரிய ஒளியில் புற ஊதாக்கதிர்கள் காணப்பட்ட போதிலும், வைரக்கல்லைப் பாதிக்கும் அளவிற்கு அவற்றின் தாக்கம் இருப்பதில்லை. எனவே, வெயிலில் அணிந்து செல்வதால் வைரம் பாதிப்படைவதில்லை.