கண்ணுக்குள்ளே காதலி: வைரலாகும் யுவி வெளியிட்ட புகைப்படம்!
- Editor
- Category: தகவல்கள்
- Hits: 298
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரரான யுவராஜ் சிங் தனது வருங்கால மனைவி ஹேசல் கீச்சுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.
இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கிற்கும், லண்டன் நடிகை ஹேசல் கீச்சிற்கும் கடந்த ஆண்டு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இவர்கள் இந்த ஆண்டு இறுதியில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவர்கள் இருவரும் தற்போது ஒன்றாகவே அனைத்து இடங்களுக்கும் சென்று வருன்றனர். ஐபிஎல் போட்டியில் கூட ஹேசல் கீச் தோன்றி யுவராஜ் சிங்கிற்கு ஆதரவு அளித்தார்.
அதன் படி ஐபிஎல் இறுதிப் போட்டியில் அசத்திய யுவராஜ் சிங் ஐதராபாத் அணி கிண்ணம் வெல்ல காரணமாக இருந்தார்.
இந்நிலையில் தற்போது ஓய்வில் இருக்கும் யுவராஜ் சிங், தனது வருங்கால மனைவியான ஹேசல் கீச்சுடன் ஓய்வு நேரத்தை செலவிட்டு வருகிறார்.
இவர் சமீபத்தில் படகில் ஹேசல் கீச்சுடன் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை இண்ஸ்டாகிராமில் பதிவேற்றினார். அதில் ஹேசல் கீச்சின் முகம் அவர் அணிந்திருந்த கண்ணாடியில் தெரியும் படி இருந்தது. இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.