கணவன்களே…அதை கொஞ்சம் அறிந்து கொள்ளுங்கள்!
- Editor
- Category: ஆலோசனை
- Hits: 437
கணவன்மார்களே….உங்களின் அன்பை எதிர்பார்த்து உங்களையே சுற்றி வரும் மனைவியர் மீது அன்பு மழை பொழியுங்கள்.
எப்போதும் மனைவியர் தங்கள் கணவன்களை சினுங்களோடு செல்லப்பெயர் வைத்து அழைப்பார்கள், ஆனால் பொதுவாக “என்னங்க” என்று அழைப்பார்கள்.
இந்த “என்னங்க” என்ற வார்த்தைக்கு மனைவியரின் அகராதில் பல்வேறு அர்த்தங்கள் உள்ளன.
கணவன்களே…அதை கொஞ்சம் அறிந்து கொள்ளுங்கள்!
பாத்ரூமில் நின்று ”என்னங்க” என்று அழைத்தால் சோப்பு, ஷாம்பு, டவல் வேண்டும் என்று அர்த்தம்.
சாப்பிடும் ஹொட்டலில் ””என்னங்க” என்று அழைத்தால் பில்லை கட்டு என்று அர்த்தம்.
கல்யாண வீட்டில் ”என்னங்க” என்றால் தெரிந்தவர் வந்திருக்கிறார் வா என்று அர்த்தம்.
துணிக்கடையில் நின்று ”என்னங்க” என்றால் தேடிய புடவை கிடைத்து விட்டது என்று அர்த்தம்.
வண்டியில் செல்லும் போது “என்னங்க” என்றால் வண்டியை நிறுத்துங்கள் ஏதேனும் வாங்க வேண்டும் என்று அர்த்தம்.
வெளியே பார்த்து ”என்னங்க” என்றால் அறியாத ஆள் வாசலில் என்று அர்த்தம்.
பீரோவின் முன் நின்று ””என்னங்க” என்று அழைத்தால் பணம் வேண்டும் என்று அர்த்தம்.
சாப்பாட்டை எடுத்து வைத்து ”என்னங்க” என்றால் சாப்பிட வர்றீங்களா என்று அர்த்தம்.
சாப்பிடும்போது என்னங்க என்றால் சாப்பாடு சுவைதானா என்று அர்த்தம்.
கண்ணாடி முன் நின்று ”என்னங்க” என்றால் நகை அழகா என்று அர்த்தம்.
நடக்கும்போது ”என்னங்க” என்றால் விரலை பிடித்துகொள்ளுங்கள் என்று அர்த்தம்.
கடைசி மூச்சின்போது ”என்னங்க” என்றால் என்னையும் அழைத்து செல்லுங்கள் என்று அர்த்தம்.