இணையதளங்களில் பொருட்கள் வாங்குவது பாதுகாப்பானதா?
- Editor
- Category: ஆலோசனை
- Hits: 270
Amazon, Flipkart போன்ற இணையதளங்களில் பொருட்கள் வாங்குவது எந்த அளவு பாதுகாப்பானது?
Amazon, Flipkart போன்ற இணைய தளங்களில் பொருட்கள் வாங்குவது என்பது இன்றைய நவீன காலகட்டத்தில் மிகவும் பழகி போனதாகவும், தவிர்க்க இயலாததாகவும், எளிதானதாகவும் இருக்கிறது. இது போன்ற இணையதளங்களில் பொருட்கள் வாங்கும் போது ஒரு சில விஷயங்களை நாம் கவனிக்க வேண்டியுள்ளது.
- இணையதள சேவை நிறுவனத்தின் நம்பகத்தன்மை
- சேவை வழங்குபவர் இருக்கும்/செயல்படும் இடம்
- சேவை வழங்கும் நிறுவனத்துடன் பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்/நுகர்வோர் ஏற்படுத்திக் கொள்ளும் ஒப்பந்தம்
- காப்புறுதி/ஈட்டுறுதி
- பொருளில் குறை இருப்பின் மாற்றி வழங்குவதற்கான வசதி/காலம்.
இவை போன்ற அடிப்படை விஷயங்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டும். பின்புதான் பொருட்கள் வாங்க முடிவு செய்து வாங்க வேண்டும். ஏனெனில் ஒரு சில நிறுவனங்கள் ‘தாங்கள் எதற்கும் பொறுப்பல்ல’, ‘நுகர்வோரே பொறுப்பு’ எனக் குறிப்பிடுவர். இது போன்ற நேரங்களில் நுகர்வோர் சிரமப்பட வேண்டியிருக்கும். அதனால் வாங்கும் முன்பு அது குறித்து நன்கு தெரிந்து வாங்குவது நல்லது. இருப்பினும் Consumer Protection Actன் கீழ் இணையதளங்களில் பொருட்கள் வாங்கும்போது குறைபாடுகள் இருந்தால் நடவடிக்கை எடுக்கலாம். வழக்கிட்டு நிவாரணம் பெறலாம்.