சம்பா கோதுமை ரவை இட்லி
- Editor
- Category: சமையல் குறிப்புகள்
- Hits: 200
என்னென்ன தேவை?
சம்பா கோதுமை ரவை - 1/2 கப்,
எண்ணெய் - 2 டீஸ்பூன்,
கடுகு - 1/4 டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்,
கடலைப்பருப்பு - 1/4 டீஸ்பூன்,
தயிர் - 4 டேபிள்ஸ்பூன்,
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை,
கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிது,
உப்பு - தேவையான அளவு,
பச்சைமிளகாய் - 1,
கேரட் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்,
ஈனோ சால்ட் - 1 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
சம்பா கோதுமை ரவையை 2 நிமிடங்கள் கடாயில் போட்டு வறுத்து தனியாக வைக்கவும். கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு போட்டு தாளிக்கவும். பச்சைமிளகாயை கீறி போடவும். பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்க்கவும். அடுப்பை அணைத்து விடவும். சம்பா ரவையை தாளித்த கலவையில் சேர்த்து நன்கு ஆறியதும் தயிர், மஞ்சள் தூள், கேரட் துருவல், உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். சிறிது தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்தில் இருக்க வேண்டும். உடனே ஈனோ சால்ட் சேர்த்து நன்கு கலக்கி இட்லியாக ஊற்றவும். 5-7 நிமிடங்கள் ஆவியில் வைத்து எடுத்து பரிமாறவும். ஈனோ சால்ட் சேர்த்தவுடன் மாவை உடனே இட்லியாக ஊற்றவும்.