மார்க் ஆண்டனி படத்திற்காக நடிகர் எஸ்.ஜே. சூர்யா வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா?
- admin
- Category: சினிமா
- Hits: 168
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் முதல் முறையாக விஷால் நடித்து நேற்று திரையரங்கில் வெளிவந்த படம் மார்க் ஆண்டனி.
இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா வில்லனாக நடித்து அசத்தியிருந்தார். படத்தின் வெற்றிக்கு மிகமுக்கியமாக இருந்தது எஸ்.ஜே. சூர்யா நடிப்பு என்று கூட கூறலாம்.
மேலும் இப்படத்தில் ரிது வர்மா, சுனில், செல்வராகவன் என பல திரையுலக நட்சத்திரங்களும் இப்படத்தில் நடித்திருந்தனர்.
ரசிகர்களின் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் எந்த வகையிலும் அவர்களை ஏமாற்றவில்லை என்று விமர்சனங்கள் வெளியாகியுள்ளது. மேலும் வசூலில் கூட மார்க் ஆண்டனி படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
எஸ்.ஜே. சூர்யா சம்பளம்
இந்நிலையில், படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த எஸ்.ஜே. சூர்யா, இப்படத்தில் நடிக்க வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, மார்க் ஆண்டனி படத்தில் நடிக்க நடிகர் எஸ்.ஜே. சூர்யா ரூ. 3 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.